மதுபோதை தகராறில் வாலிபருக்கு கத்திகுத்து
Advertisement
அப்போது, அருகில் குடித்துக்கொண்டிருந்த ஆயப்பாக்கத்தை சேர்ந்த பிரகாசுக்கும், வினோத்துக்குமிடையே குடிபோதையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், ஆத்திரமடைந்த பிரகாஷ் மற்றும் மூர்த்தி ஆகிய இருவரும் தாங்கள் வைத்திருந்த சிறிய கத்தியால் வினோத்தை குத்திவிட்டு தப்பியோடினர்.
காயமடைந்த வினோத் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த சதுரங்கப்பட்டினம் போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பிரகாஷை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மூர்த்தியை தேடி வருகின்றனர்.
Advertisement