வரத்து குறைவால் முருங்கைக்காய் கிலோ ரூ.400க்கு விற்பனை: கோயம்பேடு மார்க்கெட்டில் விலை கிடுகிடு அதிகரிப்பு
சென்னை: கோயம்பேடு மாக்கெட்டில் முருங்கைகாய் வரத்து குறைவால் விலை கிடுகிடு வென அதிகரித்து ஒரு கிலோ ரூ.400க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது முருங்கைகாயின் சீசன் முடிந்ததால் வேறு வழி இல்லாமல் வியாபாரிகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து அதனை வரவழைக்கப்பட்டு விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து 50 அல்லது 100 டன் முருங்கைக்காய் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினசரி வருவது வழக்கம். தற்போது தமிழ்நாட்டில் முருங்கைக்காயின் சீசன் முடிந்து விட்டதால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேற்றுமுன்தினம் மகாராஷ்டிராவில் இருந்து 40 இருந்து 50 டன் மட்டும் குறைவான முருங்கைக்காய் வந்ததால் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.30லிருந்து ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஒன்றை டன் என மிக குறைவான முருங்கைக்காய் மட்டும் வந்ததால் வியாபாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் வேறு வழியில்லாமல் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.300லிருந்து ரூ.400க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர். கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் சங்க தலைவர் எஸ்.எஸ் முத்துகுமார் கூறுகையில், தமிழ்நாட்டில் முருங்கைகாய் சீசன் முடிந்ததால். மகாராஷ்டிராவில் இருந்து வரத்து குறைவால் முருங்கைக்காய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மேலும் முருங்கைக்காயின் விலை உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வியாபாரிகளின் நலன் கருதி தமிழக அரசு மும்பையில் இருந்து முருங்கைக்காய் சப்ளை செய்தால் மீண்டும் அதன் விலை குறையும் என கூறினார்.