போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தாவூத் கூட்டாளி மனைவியுடன் கைது
மும்பை: மும்பையில் நடந்த தொடர்குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர் தாவூத் இப்ராகிம். தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருந்தபடி தனது போதைப்பொருள் சாம்ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் தானிஷ் சிக்னா என்ற தானிஷ் மெர்சண்ட் தாவூத்தின் போதைப்பொருள் கடத்தல்களை கவனித்து வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 18ம் தேதி புனேயில் 502 கிராம் போதைப்பொருளை மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து மும்பையில் உள்ள தானிஷின் வீட்டில் வைத்து வேறு ஒரு நபரிடம் இருந்து 839 கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. விசாரணையில் தானிஷும் அவருடைய மனைவிக்கும் இந்த போதைப்பொருள் கடத்தலில் தொடர்பிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் தானிஷையும் அவர் மனைவியையும் பல இடங்களில் தேடினர். இறுதியாக கோவாவில் ரிசார்ட் ஒன்றில் பதுங்கியிருந்த போது 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.