தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போதை மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம்; கைதான நடிகருக்கு ஆண்மை பரிசோதனை: பாலிவுட்டில் பரபரப்பு

புதுடெல்லி: பிரபல தொலைக்காட்சி நடிகர் ஆஷிஷ் கபூர், பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது ஆண்மைப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துப் பிரபலமான நடிகர் ஆஷிஷ் கபூர் (39) மீது, டெல்லியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்தார். அந்தப் புகாரில், விருந்து நிகழ்ச்சி ஒன்றில் தனது பானத்தில் போதை மருந்து கலந்து, ஆஷிஷ் கபூர் மற்றும் அவரது நண்பர்கள் தன்னை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதனை காணொலியாகப் பதிவு செய்து மிரட்டியதாகவும், அப்போது ஒரு பெண்ணும் தன்னைத் தாக்கியதாகவும் முதலில் தெரிவித்திருந்தார்.

Advertisement

இந்தப் புகாரின் அடிப்படையில், கூட்டுப் பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாக இருந்த ஆஷிஷ் கபூரை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். கோவாவில் பதுங்கியிருந்த அவர், போலீசார் நெருங்குவதை அறிந்து அங்கிருந்து தப்பி, புனேவில் உள்ள தனது நண்பர் வீட்டில் தங்கியிருந்தபோது கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். இதனிடையே, புகார் அளித்த பெண் தனது வாக்குமூலத்தை மாற்றியுள்ளார். ஆஷிஷ் கபூர் மட்டுமே தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தற்போது தெரிவித்துள்ளார்.

இதனால், இந்த வழக்கு கூட்டுப் பாலியல் பலாத்காரத்தில் இருந்து, தனிப்பட்ட பாலியல் பலாத்கார வழக்காக மாற்றப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஆஷிஷ் கபூர், டெல்லி திஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆண்மைப் பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டார். இந்தப் பரிசோதனை அறிக்கை, வழக்கின் முக்கிய ஆதாரமாக அமையும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Related News