தூத்துக்குடியில் 12 கிலோ போதைப்பொருள் பறிமுதல் : 4 பேர் கைது
உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி பழைய கடற்கரையில் இருந்து படகு மூலம் போதைப்பொருள் கடத்தப்பட உள்ளதாக தகவலை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்
வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனையில் 12 கிலோ செறிவூட்டப்பட்ட கஞ்சா ஆயிலை பறிமுதல் செய்தனர். பழைய துறைமுக பகுதியில் இருந்து மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரரின் உதவியுடன் போதைப்பொருள் கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்த முயன்ற சுதாகர், ஜேசுராஜ், கிங்சிலி, மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர் மாரிமுத்து ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.