கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்
Advertisement
பாட்னாவில் இருந்து எர்ணா குளம் நோக்கி சென்ற ரயிலில் வந்த பயணிகளில் சிலரிடம் பிளாட்பாரத்தில் வைத்து சோதனை நடத்தப்பட்டது. பொருட்கள், துணிப்பைகளில் போலீசார் சோதனையிட்ட போது சிலரிடம் குட்கா, பான்பராக் போன்ற போதை பாக்கு பாக்கெட்டுகள் இருந்தன. 13 பேரிடம் இருந்து 40 கிலோ எடையிலான போதை பாக்கு பாக்கெட்டுகள் சிக்கியது. இவற்றை ரேஸ்கோர்ஸ் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, பீகாரை சேர்ந்த மணீஷ்குமார் (26), ஷா (23), சாந்தகுமார் (27), ரிஷப் (23) உட்பட 13 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement