போதை ஏட்டு சஸ்பெண்ட்
திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் கோட்டூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் ராஜ்குமார்(45). நேற்றுமுன்தினம் காலை வழக்கம் போல் பணியில் இருந்தார். அப்போது வாக்கி டாக்கியில் பேசும்போது வாய் உளறி பேசியதாக தெரிகிறது.
Advertisement
இதில் சந்தேகப்பட்ட திருத்துறைப்பூண்டி இன்ஸ்பெக்டர் கழனியப்பன், அவரை காவல்நிலையத்துக்கு நேரில் வரவழைத்து தொடர்ந்து விசாரித்தார். அப்போது ராஜ்குமார் பணியில் இருந்த போது மது அருந்தி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பணியின்போது மதுஅருந்தி இருந்த ஏட்டு ராஜ்குமாரை சஸ்பெண்ட் செய்து எஸ்பி உத்தரவிட்டார்.
Advertisement