தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காவல் துறையினர் சார்பில் பழங்குடியினருக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு

கோத்தகிரி : கோத்தகிரி அருகே உள்ள கடைக்கோடி கிராமமான கரிக்கையூர் கிராமத்தில் நீலகிரி மாவட்ட காவல் துறையினர் சார்பில் பழங்குடியினருக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.நீலகிரி மாவட்ட காவல் துறையினர் சார்பில் பழங்குடியினருக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று கரிக்கையூர் கிராமத்தில் நடைபெற்றது.
Advertisement

சோலூர் மட்டம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கரிக்கையூர் கிராமத்தில் கரிக்கையூர், குள்ளாங்கரை, வக்கணாமரம், சாமைக்கொடார் உட்பட 30 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன் பெரும் வகையில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், குன்னூர் டிஎஸ்பி குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவிற்கு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போதைப்பொருள் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்து பழங்குடியின மக்களுக்கு எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் சதிஷ், டிஎஸ்பி தங்கவேல், குன்னூர் டிஎஸ்பி குமார், கூடுதல் டிஎஸ்பி முத்தரசு ஆகியோர் போதைப்பொருள் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்து சிறப்புரையாற்றினார்கள். பின்னர் கரிக்கையூர், சாமைக்கொடார், வக்கணாமரம், அரக்கோடு, கடினமாலா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு போர்வை, டார்ச் லைட் போன்ற நலத்திட்ட உதவிகள் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் தலைமையில் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், ஏடிஎஸ்பி தங்கவேல், குன்னூர் டிஎஸ்பி குமார், டிஎஸ்பி முத்தரசு, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் சதிஷ், கோத்தகிரி இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன், குன்னூர் இன்ஸ்பெக்டர் சதிஷ், மதுவிலக்கு காவல் இன்ஸ்பெக்டர் கவிதா, சோலூர் மட்டம் காவல் சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாதா, கோத்தகிரி காவல் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த் பயிற்சி, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் மாவட்டத்தில் உள்ள காவல் துறையினர், காவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்வில் கரிக்கையூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன் பெற்றனர்.

Advertisement