தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

109 டிரோன்கள், 5 ஏவுகணைகள் உக்ரைன் மீது ரஷ்யா விடிய, விடிய தாக்குதல்: 2 பேர் பலி

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை நடத்திய தாக்குதலில் சிறுமி உள்பட 2 பேர் கொல்லப்பட்டனர். உக்ரைன் - ரஷ்யா போர் மூன்றாண்டுகளை கடந்தும் முடிவின்றி நீடிக்கும் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்த போரில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு நிதி, ஆயுத உதவிகளை செய்து வந்தாலும், உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

அதன்ஒரு பகுதியாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இருவரிடமும் தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தாலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த சூழலில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை உக்ரைனின் பல்வேறு பகுதிகள் மீது ரஷ்யா 109 டிரோன்கள், 5 ஏவுகணைகள் மூலம் விடிய, விடிய தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் சபோரிஜியா பகுதியின் டோலிங்கா கிராமத்தில் 9 வயது சிறுமி கொல்லப்பட்டார். மேலும் 16 வயது சிறுமி காயமடைந்தாள். இதேபோல், கெர்சன் பகுதியில் ரஷ்யா நடத்திய ஷெல் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் ஏராளமான வீடுகள் இடிந்து தரை மட்டமாகின. இந்த தாக்குதல் காரணமாக அடுத்த வாரம் இஸ்தான்புல்லில் ரஷ்யா உக்ரைன் இடையே நடக்க உள்ள அமைதி பேச்சுவார்த்தையில் சிக்கல் எழுந்துள்ளது.

Related News