சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணி திணறும் வாகன ஓட்டிகள்
சென்னை: சென்னை பெங்களூர் தேசிய நெடுசாலை அதாவது ஓசூர் அருகே முதல் சிப்கார்ட் பகுதியில் தான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதாவது இந்த பணி ஆமைவேகத்தில் நடைபெறுகிறது. என்று சொல்லலாம் இதனால் இந்த பகுதியில் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகின்றனர். இந்த நிலையில் இன்று காலை முதல் அந்த பகுதியில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தேசிய நெடுசாலையில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்துக்கு மேல் வாகனங்கள் கனரக வாகனங்கள் பேருந்துகள் மற்றும் கார்கள் என அனைத்தும் நிற்கிறது.
இதனால் பணிக்கு செல்வோர் மற்றும் கல்லுரிக்கு செல்வோர் பெங்களூர் செல்லக்கூடியவர்கள் வெளிமாநிலத்துக்கு செல்லக்கூடியவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
பணிகளை விரைவில் முடிக்குமாறு பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. தொடர் கோரிக்கையாக வாகன ஓட்டிகளும் தொடர்ந்து இந்த பணியை விரைந்து முடிக்கவேண்டும் என்பது கோரிக்கையாக இருந்து வருகிறது.
இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தேசியநாடுசாலையில் கடுமையான போக்குவரத்து ஏற்படுவதால் பெங்களூர் செல்லக்கூடிய பொதுமக்கள் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.