ஓட்டுனருக்கு விதிக்கப்பட்ட ஒரு ஆண்டு சிறை தண்டனை மாற்றம்: சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: ஓட்டுனருக்கு விதிக்கப்பட்ட ஒரு ஆண்டு சிறை தண்டனை மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 4 நாட்கள் சிறையில் இருந்ததால் அதுவே போதுமானது. 4 நாட்கள் சிறையில் இருந்துள்ளதையே தண்டனையாக மாற்றுகிறேன். சூழ்நிலையை கருத்தில் கொண்டு, கீழ் நீதிமன்றம் வழங்கிய சிறை தண்டனையை மாற்றி அமைக்கிறேன் என நீதிபதி பரத சக்கரவர்த்தி தெரிவித்தார். 2013ல் தற்கொலைக்கு முயன்ற வெங்கடேஷை காப்பற்ற, மருத்துவமனையில் சேர்க்க சாகுல் ஹமீது காரை வேகமாக ஒட்டியுள்ளார். அப்போது கோவை மார்ச்சநாயக்கன்பாளையம் அருகே வந்தபோது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து ஆனைமலை காவல்துறை விபத்து வழக்கு பதிவு செய்து சாகுல் ஹமீதை கைது செய்தது. சாகுல் ஹமீதுக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை விதித்து பொள்ளாச்சி மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பொள்ளாச்சி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சாகுல்ஹமீது உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.