தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வடகிழக்குப் பருவமழை முன்னிட்டு 44 கால்வாய்களிலும் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

 

Advertisement

சென்னை: வடகிழக்குப் பருவமழை முன்னிட்டு சென்னை மாநகராட்சியின் 44 கால்வாய்களிலும் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை முன்னிட்டு சென்னை மாநகராட்சி சாபில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி சார்பில் 215 இடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் உணவு, சுகாதார வசதி, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளன. நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க ஏதுவாக 106 மைய சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு உணவு வழங்கும் வகையில் நேற்று 68 சமையற்கூடங்கள் மூலமாக உணவு தயாரிக்கப்பட்டு, 1,48,450 நபர்களுக்கு காலை உணவும், 76 சமையல் கூடங்கள் மூலமாக உணவு தயாரிக்கப்பட்டு 2,20,950 நபர்களுக்கு மதிய உணவும், 15 சமையல் கூடங்கள் மூலமாக உணவு தயாரிக்கப்பட்டு 27,000 நபர்களுக்கு இர‘வு உணவும் என மொத்தம் 3,96,400 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

இன்று 2 சமையல் கூடங்கள் மூலம் உணவு தயாரிக்கப்பட்டு 1500 நபர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்டு நிவாரண மையங்களில் தங்க வைப்பதற்காக 103 படகுகள் தயார்நிலையில் உள்ளது. இதில் 36 படகுகள் மாநகராட்சிக்கு சொந்தமாக வாங்கி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சார்ந்த 60 நபர்கள், மாநில பேரிடர் மீட்புப் படையைச் சார்ந்த 30 நபர்கள் தயார்நிலையில் உள்ளனர். மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 1,436 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. 150 எண்ணிக்கையில் 100ஹெச்பி மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. டிராக்டர் மேல் 500 மோட்டார் பம்புகள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இதன் மூலம் மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீர் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

2 ஆம்பிபியன், 3 ஆம்பிபியன் எஸ்கவேட்டர்கள், பல்வகை பயன்பாட்டிற்கான 6 ரோபோடிக் எஸ்கவேட்டர்கள், 3 மினிஆம்பிபியன், 7 சூப்பர் சக்கர் வாகனங்கள், 15 மரக்கிளை அகற்றும் சக்திமான் வாகனங்கள், உட்பட மொத்தம் 478 வாகனங்கள் மற்றும் இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன. சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விழும் மரங்களை அகற்றுவதற்காக ஹைட்ராலிக் மர அறுவை இயந்திர வாகனங்கள் 15, ஹைட்ராலிக் ஏணி 2, கையடக்க மர அறுவை அறுப்பான் 224, டெலஸ்கோபிக் மர அறுவை இயந்திரங்கள் 216 என மொத்தம் 457 மர அறுவை இயந்திரங்கள் தயார்நிலையில் உள்ளன. 17ம் தேதி முதல் 23ம் தேதி வரை மழையின் காரணமாக விழுந்த 26 மரங்களும் அகற்றப்பட்டுள்ளது.சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் மழைநீர்த் தேக்கம் இன்றி போக்குவரத்து சீராக உள்ளது.

இதுவரை 1,132 கிலோமீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால்வாய்கள் தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியின் 44 கால்வாய்களிலும் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 37 கால்வாய்களில் தடுப்புச் சுவர் உயர்த்தி கட்டுதல், அதன் மேல் கம்பி வேலி அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஓட்டேரி நல்லா கால்வாயில் 10.10 கிலோ மீட்டர் நீளத்திற்கும், விருகம்பாக்கம் கால்வாயில் 6 கிலோ மீட்டர் நிலத்திற்கும், கொடுங்கையூர் மற்றும் கேப்டன் கால்வாயில் தலா 3 கிலோமீட்டர் நீளத்திற்கும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.1 இலட்சத்திற்கும் மேற்பட்ட வண்டல் மண் சேகரிப்புத் தொட்டிகள் தூர்வாரப்பட்டுள்ளன. இப்பணிகள் தொடர்ச்சியாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 24 மணிநேரமும் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் பொதுமக்களிடமிருந்து 150 இணைப்புகளுடன் கூடிய 1913 என்ற உதவி எண்ணிற்கு வரும் புகார்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு சென்னை மாநகராட்சியில் அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 22 ஆயிரம் பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதே போல் சென்னை குடிநீர் வாரியம் சார்பில், 299 தூர்வாரும் இயந்திரங்கள், 73 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 181 ஜெட்ராடிங் வாகனங்கள், 45 ஜெட்டிங் மற்றும் உறிஞ்சும் இயந்திரங்கள், 3 கழிவுநீர் ஊர்திகள், 3 கழிவுநீர் அகற்றும் ரோபோ இயந்திரங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள 91 கழிவுநீர் ஊர்திகள் என மொத்தம் 695 கழிவுநீர் அகற்றும் இயந்திரங்கள் கழிவுநீர் அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. 15 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் 2149 களப்பணியாளர்கள் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றும் பணிகளை மேற்கொள்ள ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

454 குடிநீர் வாகனங்கள் மூலம் சராசரியாக 3500 நடைகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 106 சமையல் கூடங்கள் மற்றும் 215 வெள்ள நிவாரண மையங்களுக்கு சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் தேவையான குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News