டிஆர்டிஓவின் 7 தொழில்நுட்ப உபகரணங்கள் முப்படைகளிடம் ஒப்படைப்பு
புதுடெல்லி: தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 7 தொழில்நுட்ப உபகரணங்களை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) முப்படைகளிடம் ஒப்படைத்துள்ளது. இந்த 7 உபகரணங்களில் வான்வழி சுய பாதுகாப்பு ஜாமர்களுக்கான உள்நாட்டு உயர் மின்னழுத்த பவர் சப்ளை, அதிக அலையிலும் தாங்கக் கூடிய கடற்படைக்கான துறைமுக அணைக்கரை, மேம்பட்ட மிகக்குறைந்த அதிர்வெண்-உயர் அதிர்வெண் மாற்ற மேட்ரிக்ஸ் அமைப்புகள், ஆழ்கடல் தளங்களுக்கான விஎல்எப் லூப் ஏரியல்கள் உள்ளிட்டவை அடங்கும். வெளிநாட்டு இறக்குமதியை நம்பியிருப்பதை குறைக்கும் வகையில் இந்த தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement