புதுக்கோட்டை அருகே பயங்கரம்; கணவனை கொன்று புதைத்து நாடகம்: மனைவி, மகள்கள் கைது
புதுக்கோட்டை: மல்லாங்குடியில் கணவனை கொன்று புதைத்துவிட்டு நாடகமாடிய மனைவி, அவரது 2 மகள்கள் கைது செய்யப்பட்டனர். குடும்பத் தகராறில் கணவன் பழனிவேலுவை கொன்று புதைத்துவிட்டு சிகிச்சையில் இருப்பதாக மனைவி நாடகமாடினார். வீட்டின் கழிவறை அருகே குழி தோண்டி மகள்களின் உதவியுடன் கணவன் உடலை புதைத்துவிட்டு நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டனர். பழனிவேலுக்கு கொழுப்புக் கட்டிகள் உள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக மனைவி மகாலட்சுமி அனைவரையும் நம்ப வைத்துள்ளார்.
நீண்ட நாள்களாக பழனிவேல் தன்னை தொடர்புக் கொள்ளாததால் அவரது சகோதரி காவேரிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தனது சகோதரரை காணவில்லை என பழனிவேலுவின் சகோதரி அளித்த புகாரை அடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில் மகாலட்சுமி, தனது கணவர் பழனிவேலுவை அடித்துக் கொன்றது தெரிய வந்தது. பழனிவேலு கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததை அடுத்து அவரது மனைவி, உடந்தையாக இருந்த 2 மகள்கள் கைது செய்யப்பட்டனர்.
மனைவி மகாலட்சுமி, மகள்கள் தமிழ்செல்வி (25), (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பழனிவேலின் உடலைத் தோண்டி எடுத்து, உடற்கூராய்வு செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்