தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கூடுதல் வரதட்சணை, கள்ளக்காதல் விவகாரம் மனைவியை அடித்து கொன்ற எஸ்ஐ? தந்தை பரபரப்பு புகார்; உறவினர்கள் மறியல்

சாத்தூர்: கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை, கள்ளக்காதல் விவகாரத்தில் தனது மகளை எஸ்.ஐ கொன்று உள்ளதாக தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். எஸ்ஐயை கைது செய்யக் கோரி பெண்ணின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்தவர் அருண்குமார்(30). தற்போது இவர் சாத்தூர் டவுன் காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணிபுரிந்து வருகிறார்.

Advertisement

இவருக்கும், சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே மறவன்குளம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகள் இளவரசிக்கும்(25), கடந்த 2022ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. திருமணத்தின்போது பெண் வீட்டில் 70 பவுன் தங்கநகை கார் மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் சாத்தூரில் நடைபெற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சி பாதுகாப்பு பணியில் எஸ்ஐ அருண்குமார் ஈடுபட்டிருந்தார். பணி முடித்து, சாத்தூர் என்ஜிஓ காலனியில் உள்ள வீட்டிற்கு அருண்குமார் வந்தபோது, கதவு பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்து பார்த்தபோது மனைவி இளவரசி தூக்கில் பிணமாக தொங்குவது தெரிந்தது. இதையடுத்து இளவரசியின் உடலை பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இளவரசியின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள், விருதுநகர் அரசு மருத்துவமனை முன்பு நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, இளவரசி மரணத்துக்கு காரணமான எஸ்ஐ மீது வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டுமென கோஷமிட்டனர். இதைத்தொடர்ந்து, விருதுநகர் டிஎஸ்பி யோகேஷ் குமார் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.

இதனிடையே பெண்ணின் தந்தை கருப்பசாமி, சாத்தூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரில், ‘எனது மகள் திருமணத்தின்போது வரதட்சணையாக 81 பவுன் நகை, கார் வாங்க ரூ.5 லட்சம் கொடுத்தோம். திருமணத்திற்கு பிறகும் கூடுதல் வரதட்சணை கேட்டு எனது மகளை அருண்குமார் துன்புறுத்தி வந்தார். இதனால், 8 மாதங்களுக்கு முன் எனது மகள் எங்கள் வீட்டுக்கு வந்தார். பின்னர் சமாதானம் பேசி அனுப்பி வைத்தோம். அருண்குமாருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரிய வரவே, எனது மகள் அதனைக் கண்டித்தார்.

இதில், ஆத்திரமடைந்த அருண்குமார் எனது மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். நேற்று (நேற்று முன்தினம்) பகல் 12 மணிக்கு எனக்கு போன் செய்த மகள், இங்கு எனக்கு பயமாக உள்ளது. என்னை அழைத்துச் செல்லுங்கள் என தெரிவித்தார். பின்னர் பகல் 1.30 மணியளவில் அருண்குமாரின் உறவினர் ஒருவர் எனக்கு போன் செய்து, எனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக தெரிவித்தார். எனது மகளை அடித்துக் கொன்றுள்ளனர்; இறப்பில் மர்மம் உள்ளது. இதுகுறித்து ஆர்டிஓ விசாரித்து அருண்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

* கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் வக்கீலுக்கு சித்ரவதை கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு

நாகர்கோவில் கணேசபுரம் பகுதியில் வசித்து வருபவர் பொன்னுதுரை(35). இவரது மனைவி அன்னசுதா(31). வக்கீல். இவர்களது திருமணம் கடந்த 2018ல் நடந்தது. திருமணத்தின் போது ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் 150 பவுன் தங்க நகைகளும், ரூ.5 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் பொன்னுதுரை மற்றும் அவரது தந்தை சிவதாணு, சகோதரி உஷா தேவி மற்றும் அவரது கணவர் தினேஷ் ஆகியோர் சேர்ந்து அன்னசுதாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர்.

மேலும், குழந்தை இல்லாத காரணத்தால் அன்னசுதாவை தகாத வார்த்தையால் தினமும் திட்டி வந்துள்ளனர். சம்பவத்தன்று அன்னசுதாவை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து வீட்டிலிருந்து வெளியே இழுத்து தள்ளி துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வக்கீல் அன்னசுதா கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அன்னசுதாவின் கணவர் பொன்னுதுரை உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News