இரட்டை இலக்கத்தில் பொருளாதார வளர்ச்சி முதல்வரின் ஆளுமை திறன் மிக்க நடவடிக்கை: வைகோ பாராட்டு
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு 11.19 சதவீதம் என்கிற இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அரசு பதிவு செய்து சாதனை படைத்திருக்கும் நிலையில், இது 2025-26ம் ஆண்டில் 12 சதவீதமாக உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டி இருப்பதற்கு திராவிட மாடல் அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆளுமைத் திறன் மிக்க நடவடிக்கைகள் காரணமாகும். திராவிட மாடல் அரசுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதுடன் பொருளாதார வளர்ச்சியில் மேலும் உச்சம் தொட்டு இலக்கை அடைவதற்கு வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.