அமைதிக்கான நோபல் பரிசை விரும்பும் டொனால்ட் ட்ரம்ப்புக்கு இந்தாண்டு பரிசு இல்லை!
வாஷிங்டன்: அமைதிக்கான நோபல் பரிசை விரும்பும் டொனால்ட் ட்ரம்ப்புக்கு இந்தாண்டு பரிசு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப்பின் நடவடிக்கைகளால் நிதி பற்றாக்குறையை எதிர்கொள்ளும், ஏதேனும் ஒரு சர்வதேச மனிதாபிமான அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் பல்வேறு நாட்டு தலைவர்கள் தங்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைப்பதை ஒரு கவுரவமாக கருதுகின்றனர். இதற்காக அவர்கள் தீவிர முயற்சிகளும் மேற்கொண்டு வருகின்றனர். அதுவும் இந்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்த விருதை பெற வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளார்.
தான் 2வது முறையாக பதவி ஏற்றபிறகு இந்தியா-பாகிஸ்தான் சண்டை உள்ளிட்ட 7 போரை நிறுத்தி உள்ளேன். அதனால் எனக்கு தான் நோபல் பரிசு வழங்க வேண்டும் என வெளிப்படையாக கூறி வருகிறார். எப்படியும் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு தமக்கு கிடைக்கும் என்ற அதீத நம்பிக்கையில் இருந்து வருகிறார். இந்த சூழ்நிலையில் டிரம்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு இல்லை என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர அவர் திட்டமிட்டு இருந்தார்.
இது தொடர்பாக இருநாட்டு தலைவர்களுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் அந்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதன் காரணமாக அவருக்கு நோபல் பரிசு கிடைக்காது என கூறப்படுகிறது. இந்த ஆண்டு நோபல் பரிசு கமிட்டி குழுவினர் அமைதிக்கான நோபல் பரிசினை ஏதாவது ஒரு மனிதாபிமானம் சார்ந்து செயல்பட கூடிய அமைப்புக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2025ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வரும் அக்.10 அன்று அறிவிக்கப்பட உள்ளது.