தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழை பற்றி எங்களுக்கு நீங்கள் சொல்ல வேண்டாம்: திருக்குறள் சொல்வது அவருக்கே புரியாது மோடியை வறுத்தெடுத்த கனிமொழி

Advertisement

தூத்துக்குடி, புதியம்புத்தூரில் தி.மு.க. சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி., பேசியதாவது: பிரதமர் திருக்குறள் சொல்வார். அது திருக்குறளா இல்லையா என்பது புரிந்து கொள்வது கடினம். வெளிநாடுகளுக்கு செல்லும் போதெல்லாம் திருக்குறளை சொல்வார். பெருமையாக சொல்வார். தமிழ் மிகப்பழமையான மொழி என சொல்வார். பிரதமரே சொல்கிறார் என பாஜவினர் கூறுகின்றனர். எங்களுக்கே தெரியும். தமிழை விட பழமையான மொழி வேறு எதுவும் இல்லை. அதைச் சொல்வதற்கு நீங்கள் வேண்டாம். தமிழுக்காக என்ன செய்தீர்கள். சமஸ்கிருத்திற்கும், இந்திக்கும் அள்ளி அள்ளிக் கொடுக்கிறார்கள். தமிழுக்கு கிள்ளிக்கூட கொடுப்பது இல்லை. பழமையான மொழி என கொண்டாடுகிறீர்களே அதற்காக என்ன செய்தீர்கள் என்றால் ஒன்றுமில்லை.

ஒன்றிய அரசின் பணத்தை எடுத்து கொடுப்பதாக சொல்கிறார்கள். மாநில அரசின் பணத்தை திருப்பி தருவதாகக்கூறி வாங்குகிறீர்களே. திருப்பி தருகிறீர்களா? எத்தனையோ முறை கேட்டாலும், அவர்கள் தர மறுக்கிறார்கள். இதற்கு பெயர் என்ன? தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, பஞ்சாப், மேற்கு வங்காளம், டெல்லி என எத்தனையோ மாநிலங்கள் பாஜவை தூக்கி எறிந்து விட்டது. இந்த நாடும் விரைவில் தூக்கி எறியும். அந்த நாள் இந்தியா வெற்றி பெறும் நாள். பாஜகவின் வெற்றி என்பது இந்த நாட்டின் தோல்வி என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்’ இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement