உள்நாடு, சர்வதேச பயணிகளுக்கு தீபாவளி சிறப்பு கட்டண சலுகை: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் அறிவிப்பு
சென்னை: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் பயணிகளுக்கு தீபாவளி சிறப்பு தள்ளுபடி கட்டண சலுகைகளை அறிவித்துள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்களின் விமானங்களில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் செப்டம்பர் 27 (நேற்று) முதல் வரும் 1ம் தேதி வரை 5 நாட்களில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு இந்த சலுகை தள்ளுபடி கட்டண டிக்கெட் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக பயணிகள் airindiaexpress.com செல்போன் ஆப்புகள் மற்றும் இணையதளங்கள் மூலமாக, டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
அவ்வாறு சலுகை கட்டணமாக, உள்நாட்டு விமானங்களில், குறைந்தபட்ச கட்டணம் ரூ.1200ம், தங்கள் விருப்பமான இருக்கைகள் தேர்ந்தெடுத்து முன்பதிவு செய்ய குறைந்தபட்ச கட்டணம் ரூ.1,300ம், அதேபோல் சர்வதேச விமானங்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.3,724ம், விருப்பமான இருக்கைகளை தேர்வு செய்து, முன்பதிவு செய்ய ரூ.4,674ம் கட்டணங்கள் வசூலிக்கப்படும். இந்த சலுகை தள்ளுபடி கட்டணங்களில் முன்பதிவு செய்த பயணிகள் சலுகை கட்டணம் டிக்கெட்களை வருகிற அக்டோபர் 12ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரையில், எந்த தேதிகளிலும் பயன்படுத்தி, பயணம் செய்து கொள்ளலாம் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நிறுவனம் அறிவிப்பு செய்துள்ளது.