சென்னை சூளைமேட்டில் நடந்து சென்ற நீலா, அவரது கணவர் சுரேஷை கடித்த நாய் ப்ளூ கிராஸிடம் ஒப்படைப்பு!
06:59 AM May 10, 2024 IST
Share
சென்னை: சென்னை சூளைமேட்டில் நடந்து சென்ற நீலா, அவரது கணவர் சுரேஷை கடித்த நாய் ப்ளூ கிராஸிடம் ஒப்படைக்கப்பட்டது. மல்லிகா என்பவர் வளர்த்து வரும் நாய் தெருவில் சென்றபோது கடித்ததாக சூளைமேடு காவல்நிலையத்தில் நீலா புகார் அளித்துள்ளார். நாய் கடித்து காயம் அடைந்த நீலா, கணவர் சுரேஷ் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.