தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு நாய் கடியால் 4,80,483 பேர் பாதிப்பு; 43 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் தெரு நாய்கள், வளர்ப்பு நாய்கள் கடித்து காயமடையும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நாய்க்குட்டி பிறந்த முதலாண்டில் இரு முறை ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். தொடர்ந்து, ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி போட வேண்டும். ஆனால், தெரு நாய்களுக்கும், சில இடங்களில் செல்லப் பிராணிகளுக்கும் தடுப்பூசி முறையாக செலுத்தப்படுவதில்லை. இப்படி தடுப்பூசி போடாத நாய்கள், மனிதர்களை கடிக்கும் போது, ரேபிஸ் தொற்று பரவி, பாதிப்பை ஏற்படுத்துகிறது.தமிழ்நாட்டில் ஜனவரி 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை 3 லட்சத்து 67 ஆயிரத்து 604 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர், 20 பேர் நாய்கடியால் உயிரிழந்துள்ளனர். கடந்த 2023ம் ஆண்டு தமிழ்நாட்டில் நாய் கடியால் 4,41,804 பேர் பாதிக்கப்பட்டு 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

அதனை தொடர்ந்து 2024ம் ஆண்டு தமிழ்நாட்டில் நாய் கடியால் 4,80,483 பேர் பாதிக்கப்பட்டு 43 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு மாவட்ட வாரியாக தமிழ்நாட்டில் சேலத்தில் அதிகபட்சமாகவும் நீலகிரியில் குறைந்தபட்சமாகவும் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சேலத்தில் 25 ஆயிரத்து 182 பேரும், திருச்சியில் 15,664 பேரும், கோவையில் 11,282 பேரும், மதுரையில் 8,716 பேரும், தலைநகர் சென்னையில் 8,552 பேரும், நெல்லையில் 8039 பேரும், பெரம்பலூரில் 2981 பேரும், நீலகிரியில் 1321 பேரும் இந்தாண்டு ஜனவரி 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நாய்க் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement