திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் ஒன்றரை வயது குழந்தையை கடித்துக் குதறிய நாய்
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் வசித்து வருபவர் அபு சாகிர். இவர் வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார். இவரது மனைவி வீட்டில் குழந்தையை வைத்து தூங்கி கொண்டிருந்த நிலையில் கொல்லைப்புறமாக இவர் வேலை செய்து கொண்டிருந்தார்.
Advertisement
அப்போது தெரு நாய் ஒன்று தொட்டிலில் தூங்கி கொண்டிருந்த குழந்தையை கவ்வி சென்றது. இதை அறிந்த அந்த தாயின் அம்மா உடனே சென்று நாயை விரட்டும் போது அந்த நாய் குழந்தையின் பாட்டியை கடித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Advertisement