நாய்க்கடியால் பாதிக்கப்பட்டோர் பின்பற்ற வேண்டிய வழிமுறை குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்..!!
டெல்லி: நாய்க்கடியால் பாதிக்கப்பட்டோர் பின்பற்ற வேண்டிய வழிமுறை குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. நாய்கடி பாதிப்பு இந்தியா முழுவதுமே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்றவேண்டிய வழிமுறைகள் குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை தற்போது நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. ரேபிஸ் வராமலிருக்க என்னென்ன செய்யவேண்டும் என்பது குறித்து நெறிமுறைகள் வெளியிட்டது.
*நாய் கடித்த காயத்தை உடனடியாக சோப்பு அல்லது சுத்தமான ஓடும் நீரில் கழுவ வேண்டும்.
*ஆல்கஹால், அல்லது வீட்டில் கிருமிநாசினியை பயன்படுத்தி நாய் கடித்த இடத்தை நன்றாக கழுவ வேண்டும்.
*வீட்டில் வளர்க்கக்கூடிய செல்ல பிராணிகள் நாய், பூனை என பிற விலங்குகளாக இருந்தாலும் சரியான நேரத்தில் அந்த செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
*நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரின் அறிவுரையின்படி ரேபிஸ் தடுப்பூசி அனைத்து தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
*நாய் கடியால் மூட நம்பிகையை தடுத்து நாய் கடித்த பக்கத்தில் மிளகாயோ, கடுகு எண்ணெயோ அல்லது வேறு எந்த பொருட்களையோ அல்லது யூடியூப் , இன்ஸ்டாகிராம் மற்றும் மூட நம்பிக்கையை பார்த்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தது.
* உடனடியாக நாய் கடித்தவுடன் அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுக வேண்டும் எனவும். அல்லது அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் எனவும் ஒன்றிய சுகாதாரத்துறை வழிகாட்டுதல் முறைகளை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக தமிழ்நாட்டிலேயேஇதுவரை 3லட்சத்து 70ஆயிரம்க்கும் மேற்பட்டோர் இந்த ஆண்டு நாய்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் ஒன்றிய அரசு ரேபிஸ் நோய் வராமல் இருக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டது.