நடப்பாண்டில் நாய்க்கடியால் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை: நடப்பாண்டில் நாய்க்கடியால் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஜன.1 முதல் ஆக.10 வரை 3,67,604 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் நாய்க்கடியால் 25,182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2024 ம் ஆண்டில் நாய்க்கடியால் 4,80,483 பேர் பாதிக்கப்பட்டு 43 பேர் உயிரிழந்ததாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.