விசாரணைக்கு சென்ற ஏட்டுக்கு வெட்டு
Advertisement
ஆலங்குளம்: நெல்லை, அம்பை அருகே பொத்தை பகுதியை சேர்ந்தவர் இசக்கிப்பாண்டி (30). இவரது மகாலட்சுமி (30). இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகாலட்சுமி நெட்டூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் இரவு நணபர் ஒருவர்டன் அங்கு சென்ற இசக்கிப்பாண்டி, மனைவியை குடும்பம் நடத்த அழைத்து உள்ளார். அவர் மறுத்ததால் இசக்கிப்பாண்டி தகராறு செய்து உள்ளார். தகவலறிந்து வந்த போலீஸ் ஏட்டு முருகன் (38), இசக்கிப்பாண்டியை கண்டித்து வீடியோ எடுத்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இசக்கிப்பாண்டி ஏட்டுவை அரிவாளால் வெட்டினார். இதில் காயமடைந்த ஏட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Advertisement