டாக்டர்கள், மருத்துவமனைகள் விளம்பரம் செய்ய ஊடகங்களுக்கு தடைவிதிக்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு
Advertisement
மனுவை விசாரித்த நீதிபதிகள், மருத்துவர்கள், மருத்துவமனை சார்ந்த ஒவ்வொரு விளம்பரங்களையும் ஊடகங்கள் சரிபார்த்து வெளியிட வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. மனுதாரர் இது சம்பந்தமாக மருத்துவ ஆணையத்திடம் புகார் அளிக்கலாம். போலியான மருத்துவமனைகள், மருத்துவர்கள் விளம்பரங்களை வெளியிட்டால் அது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கலாம். ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டங்கள் உள்ளதால் விளம்பரங்கள் வெளியிடும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பொதுப்படையாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Advertisement