மருத்துவர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் சட்டப்போராட்ட குழு கோரிக்கை
சென்னை: அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்ட குழு தலைவர் பெருமாள் பிள்ளை கூறியதாவது: சுகாதாரத் துறை செயல்பாடுகளில் 25வது இடத்தில் உள்ள பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கூட அரசு மருத்துவர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் வழங்கப்படுகிறது.
ஆனால் முன்னணி மாநிலம் என சொல்லப்படும் தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு நாட்டிலேயே குறைவான ஊதியம் தரப்படுவது தான் வருத்தமளிக்கிறது. எனவே கலைஞரின் நினைவு நாளில் கிடப்பில் போடப்பட்டுள்ள அரசாணைக்கு 354க்கு (GO.354) உயிர் கொடுக்கும் அறிவிப்பை வெளியிட வேண்டும்.