வரும் 7ம் தேதி திமுக மாணவர் அணி மாவட்ட, துணை அமைப்பாளர்கள் கூட்டம்
சென்னை: திமுக மாணவர் அணி மாவட்ட-துணை அமைப்பாளர்கள் கூட்டம் 7ம் தேதி நடக்கிறது. திமுக மாணவர் அணிச் செயலாளர் இரா.ராஜீவ்காந்தி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் கூட்டம், வருகிற 7ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி அளவில் சேலம், தீர்த்தமலை திருமண மண்டபத்தில் சுற்றுலாத் துறை அமைச்சரும், சேலம் மத்திய மாவட்ட செயலாளருமான ஆர்.ராஜேந்திரன் தலைமையில் நடக்கிறது. சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.சிவலிங்கம் எம்.பி, சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் டி.எம்.செல்வகணபதி எம்.பி., முன்னிலை வகிக்கின்றனர்.
இதில், மாநில மாணவர் அணி துணைச் செயலாளர்கள் மன்னை த.சோழராஜன், சேலம் இரா.தமிழரசன், அதலை பி.செந்தில்குமார், தமிழ் கா.அமுதரசன், பி.எம்.ஆனந்த், வி.ஜி.கோகுல், பூர்ணசங்கீதா சின்னமுத்து, ஜெ.வீரமணி, ஜெ.ராமகிருஷ்ணன் பங்கேற்கின்றனர். மாவட்ட, மாநகர அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் மற்றும் புதுச்சேரி மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் மட்டும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். கூட்டத்தில் துணை முதல்வர், திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள், கல்லூரிகளில் சேர்க்கப்பட்டுள்ள தமிழ்நாடு மாணவர் மன்ற உறுப்பினர் படிவம் ஒப்படைத்தல், மாணவர் அணியின் ஆக்கப் பணிகள் குறித்து விவாதிக்கப்படும்.