தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திமுகவின் தொடர் வெற்றி தான் எதிர் அணியினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!!

Advertisement

தஞ்சை : திமுக பவள விழாவையொட்டி தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூரில் 75 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக கொடியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்றினார். மேலும் தஞ்சாவூரில் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் சிலைகளையம் நூலகத்தையும் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் வடக்கு ஒன்றிய செயலாளர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று பேசிய உதயநிதி ஸ்டாலின், "திமுகவை அழிப்பேன் என்று பல பேர் கிளம்பி இருக்கிறார்கள்; அவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை.தமிழ்நாடு மக்களே தகுந்த பதிலடி கொடுப்பார்கள். நம்முடைய தொடர் வெற்றி தான் எதிர் அணியினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு அணிகளாக பிரிந்து கிடக்கும் அதிமுகவும், யாருமே சீண்டாத பாஜகவும் எப்படியாவது திமுகவில் ஒரு விரிசல் விழுந்து விடாதா என துண்டு போட்டு காத்திருக்கிறார்கள்.திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது. திராவிட மாடல் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியது திராவிட இயக்கம். பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை நிலைநிறுத்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்குடன் அனைவரும் உழைக்க வேண்டும். திமுக 7வது முறையாக ஆட்சி அமைக்க அனைவரும் உறுதி ஏற்போம். 2026ம் ஆண்டு திமுக ஆட்சி மலர அனைவரும் உழைக்க வேண்டும்,"இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement