திமுக மாணவர் அணி சார்பில் மாநில கல்விக்கொள்கையின் சிறப்பு குறித்த கருத்தரங்கம்: சென்னையில் 23ம்தேதி நடக்கிறது
சென்னை: திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள மாநில கல்விக் கொள்கையின் சிறப்புகளையும், தேசியக் கல்விக் கொள்கையின் தீமைகளையும் மாணவர்களிடையே எடுத்துச் செல்லும் நோக்கில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வரும் 23ம்தேதி, மாலை 4 மணிக்கு “எங்கள் கல்வி எங்கள் உரிமை” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
திமுக மாணவர் அணிச் செயலாளரான எனது தலைமையில் மாநில துணைச் செயலாளர்கள் மன்னை த.சோழராஜன், சேலம் இரா.தமிழரசன், அதலை பி.செந்தில்குமார், தமிழ் கா.அமுதரசன், பி.எம்.ஆனந்த், வி.ஜி.கோகுல், பூர்ணசங்கீதா சின்னமுத்து, ஜெ.வீரமணி, ஜெ.ராமகிருஷ்ணன் முன்னிலை வகிக்கின்றனர்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், மக்கள் நீதி மய்ய தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். கருத்தரங்கில் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.