திமுக இருப்பது உங்களுக்காகத்தான்; சிறுபான்மை மக்களுக்காக திமுக என்றும் நிற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை: திமுக இருப்பது உங்களுக்காகத்தான்; சிறுபான்மை மக்களுக்காக திமுக என்றும் நிற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் எழுதிய 5 நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். நியாயங்களின் பயணம், மௌனமாய் உறங்கும் பனித்துளிகள், உலகமறியா தாஜ்மஹால்கள், பூ பூக்கும் இலையுதிர் காலம், வானம் பார்க்காத நட்சத்திரங்கள் ஆகிய நூல்களை வெளியிட்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; ரகுமான்கான் எழுத்துக்கும் பேச்சுக்கும் ரசிகன் நான்; அவர் ஒரு நட்சத்திரப் பேச்சாளர்.
ரகுமான் பேசக்கூடிய கூட்டங்களில் நான் விரும்பி பங்கேற்பது உண்டு. அவரது பேச்சு தமிழ்நாடு முழுவதும் இடிமுழக்கமாகவும், வெடி முழக்கமாகவும் எதிரொலிக்கும். திறமைசாலியை கண்டால் அரவணைத்து வளர்ப்பார் கலைஞர். கலைஞரின் அன்பையும், மக்களின் நம்பிக்கையும் பெற்றவர் ரகுமான் கான். அதிமுகவுக்கு இரட்டை நிலைப்பாடு என்பது சாதாரணம் தான். நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்தும் வகையில் அமித் ஷா நேற்று மசோதாவை தாக்கல் செய்துள்ளார். 30 நாள் சிறையில் இருந்தால் முதல்வர், அமைச்சர்கள் பதவியை நீக்கும் மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பவே கருப்புச் சட்டத்தை கொண்டு வந்தனர். இதற்கு முன்பு சிறுபான்மையினர் நலனுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தனர். சிறுபான்மையினருக்கு எதிரான சட்டத்தை எதிர்த்தது போல் நேற்று தாக்கல் செய்த நட்கள் சட்டத்தையும் எதிர்ப்போம். திமுக இருப்பது உங்களுக்காகத்தான்; சிறுபான்மை மக்களுக்காக திமுக என்றும் நிற்கும் என்று கூறினார்.