திமுக தலைவராக 8ம் ஆண்டு தொடக்கம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொன்குமார் வாழ்த்து
சென்னை: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவர்களான அண்ணா, கலைஞர் வழியில் அந்த கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்று 7 ஆண்டுகள் மிகச் சிறப்பாக பணியாற்றி தொடர் வெற்றிகளை குவித்தவர் மு.க.ஸ்டாலின். கட்சிப் பொறுப்பை ஏற்ற மு.க.ஸ்டாலின் தான் தலைவராக இருந்த பொழுது நடந்த அனைத்து தேர்தல்களிலும் மகத்தான வெற்றி பெற்று எதிரிகளை களத்திலும் எண்ணத்திலும் தோற்கடித்தார்.
கலைஞர் இருந்திருந்தால் மு.க.ஸ்டாலினை உச்சிமோர்ந்து பாராட்டியிருப்பார். இப்படி ஆட்சியில் ஒரு முன்மாதிரி முதல்வராக மு.க.ஸ்டாலின் விளங்குகிறார். கட்சியை கட்டுக்கோப்புடன் வைத்திருக்கும் மு.க.ஸ்டாலின் கூட்டணியையும் சிதையாமல் தொடர்ந்து கட்டிக் காத்து வருகிறார். இப்படி கட்சியிலும் ஆட்சியிலும் தனி முத்திரைப் பதித்து வரும் மு.க.ஸ்டாலின் திமுகவின் தலைவராக 8ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். அவருடைய பணிகள் தொடர்ந்திட வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.