தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

2026ல் மீண்டும் திமுக ஆட்சி: வைகோ உறுதி

கம்பம்: வரும் 2026ல் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி தான் அமையும் என வைகோ தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம், கம்பத்தில் மதிமுக சார்பில் நேற்று முன்தினம் இரவு பொதுக்கூட்டம் நடந்தது. தேனி மாவட்டச் செயலர் வி.எஸ்.கே.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:

பெரியாறு அணை உரிமை மீட்புப் பிரச்னையில் கேரள அரசுக்கு எதிராகத் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது. தேனி மாவட்டம், பொட்டிப்புரத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கும் நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, திட்டத்தைச் செயல்படுத்த விடாமல் தடுத்தோம். அப்போது, கேரள அரசு என்னை ஆதரித்தது.

தற்போது கேரள அரசு, அணைகள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றி பெரியாறு அணையில் முழுக் கொள்ளளவு தண்ணீர் தேக்க முட்டுக்கட்டை போட்டு வருகிறது. முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புப் போராட்டத்தில் பங்கேற்க நான் எப்போதும் தயாராக உள்ளேன். வருகிற 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீண்டும் திமுக ஆட்சி அமையும்.இவ்வாறு அவர் பேசினார்.