தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

Advertisement

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் வெளியிட்ட அறிக்கை:

முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் ஆட்சி பொறுப்பை ஏற்றபோது, ஏறத்தாழ 6.50 லட்சம் கோடிக்கு அதிகமாக கடன் சுமையோடு ஆட்சியை நடத்த வேண்டிய பொறுப்பு ஏற்பட்டது. ஆனாலும் திறமையாலும், கடும் உழைப்பாலும் எண்ணற்ற அரிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார்.

10 ஆண்டு காலம் முடங்கி கிடந்த 18 நல வாரியங்கள் மீண்டும் சீரமைக்கப்பட்டு, வாரியத்தின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் இரட்டிப்பாக ஆக்கப்பட்டுள்ளன. கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்டிக்கொள்ள ₹4 லட்சம் இலவச நிதி, 3 ஆண்டு காலத்தில் 21 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ₹1646 கோடியில் நலத்திட்ட உதவிகள், 3 ஆண்டுகளில் புதிதாக 16.6 லட்சம் தொழிலாளர்கள் பதிவு என பிற மாநிலங்கள் தமிழ்நாட்டை பின்பற்றக்கூடிய அளவிற்கு அரிய திட்டங்களை முதல்வர் வழங்கியுள்ளார்.

விக்கிரவாண்டியில் திமுகவுக்கு வெற்றி அளிப்பதன் மூலம் முதல்வரின் ஆக்கப்பூர்வமான பணிக்கு மேலும் ஒரு அங்கீகாரம் வழங்க முடியும். இதற்காக விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி சார்பில் திண்ணை பிரசாரம் மேற்கொண்டு திமுகவை வெற்றி பெற வைப்போம்.

Advertisement