வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!!
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை தங்கச்சாலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. வைகோ, பெ.சண்முகம், திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன. சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement