டிஎம்இ-க்கு புதிய இயக்குநர் நியமனம்
சென்னை: சென்னை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தில் பணியாற்றி வந்த டாக்டர். சங்குமணி, ஓய்வு பெற்றதை அடுத்து அந்த பணியிடத்தில், திண்டுக்கல் மருத்துவக் கல்லூரியின் தலைவராக பணியாற்றி வந்த டாக்டர். ஆர்.சுகந்திராஜகுமாரி, பதவி உயர்வு மூலம், சென்னை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர்.சுகந்திராஜகுமாரி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வடக்கு சூரன்குடியை கிராமத்தை சேர்ந்தவர். நாகர்கோயிலில் உள்ள உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்த திருநெல்வேலியில் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்தார்.
சென்னை மருத்துவக் கல்லூரியில் தோல் மருத்துவத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார். பல்கலை அளவில் 3 தங்கப் பதக்கங்கள் பெற்றவர். தான் பிறந்த மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தில் மருத்துக் கல்லூரியில் பேராசிரியராகவும், தலைமை இயக்குநராகவும், பின்னர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் தலைவராகவும் பணியாற்றினார். அங்கே கூடுதல் இயக்குநராகவும் பணியாற்றினார். தற்போது சென்னை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் என அரசு முதன்மைச் செயலர் பி. செந்தில் குமார் ெவளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது.