தேமுதிகவை தவிர விஜயகாந்த் படத்தை யாரும் பயன்படுத்த கூடாது: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
வேலூர்: விஜயகாந்த் படத்தை எந்தக்கட்சியும் பயன்படுத்தக் கூடாது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வேலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்; வரும் சட்டமன்றத் தேர்தல் எப்படி இருக்கப் போகிறது? எப்படி எல்லாம் ஜெயிக்க வேண்டும் எங்கெல்லாம் ஜெயிக்க வேண்டும் என கலந்து ஆலோசனை செய்து வருகிறோம். அந்த வகையில் உங்களுடைய நம்பிக்கைகளை தொண்டர்களிடம் வெளிப்படுத்தி வருகிறோம் யாருடன் கூட்டணி என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.
தற்போது கட்சி வளர்ச்சி நோக்கியை மட்டுமே சென்று கொண்டிருக்கிறோம். விஜயகாந்த் படத்தை எக்காரணம் கொண்டும் எந்தக் கட்சியும் பயன்படுத்தக் கூடாது. கூட்டணிக்கு வரும்போது வேண்டுமானால் விஜயகாந்த் படத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். தனிப்பட்ட முறையில் எந்த அரசியல் கட்சியும் விஜயகாந்த் படத்தை பயன்படுத்தக் கூடாது; சினிமாவில் விஜயகாந்த் புகைப்படத்தை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று கூறினார்.