2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி: விஜய பிரபாகரன் பேட்டி
Advertisement
மதுரை: முத்துராமலிங்க தேவர் குருபூஜையையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் அவரது சிலைக்கு விஜய பிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் கலந்துகொண்டு மரியாதை செலுத்துவதில் பெருமை கொள்கிறோம். தேமுதிக சார்பில் கடலூரில் வரும் ஜனவரி 9ம் தேதி மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அறிவிப்போம். கூட்டணி தொடர்பான அனைத்து கேள்விகளுக்கு இந்த மாநாட்டில் பதில் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement