தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தீபாவளி பண்டிகை முன்னிட்டு சொந்த ஊருக்கு பயணம் மின்னல் வேகத்தில் முடிந்த ரயில் டிக்கெட் முன்பதிவு

 

சென்னை: தீபாவளி பண்டிகை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று காலை தொடங்கிய நிலையில் அடுத்த 10 நிமிடங்களில் மின்னல் வேகத்தில் முன்பதிவு முடிந்தது. குறிப்பாக தென்மாவட்ட ரயில்களில் அனைத்தும் சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது குறிப்பிடத்தக்கது. பண்டிகை என்றாலே வெளியூர்களில் தங்கி வேலை செய்பவர்கள், தங்களது சொந்த ஊருக்குச் சென்று குடும்பத்தினருடன் கொண்டாட ஆசைப்படுவார்கள்.

அதற்கேற்றாற்போல், பயணிகளுக்கு சவுகர்யம் ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் பண்டிகைகால சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் அந்தந்த நிர்வாகங்களால் இயக்கப்படுகின்றன. ரயில்வேயை பொருத்தவரை, 60 நாட்களுக்கு முன்பே ரயில்வே நிர்வாகம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. குறிப்பாக, பண்டிகை நாட்களில் இந்த முன்பதிவு வசதியானது பலருக்கும் பயனுள்ளதாக உள்ளது.

அந்த வகையில், இந்த ஆண்டு அக்டோபர் 20ம்தேதி (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளதால் பல கோடி பேர் வெளியூர் பயணங்களை மேற்கொள்வார்கள். இவர்களின் நீண்ட தூர பயணங்களுக்கு சிறந்த தேர்வாக இருப்பது ரயில் பயணங்கள் தான். தற்போது இரண்டு மாதங்களுக்கு முன்பு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை அமலில் இருக்கிறது.

வெளியூர் பயணத்திற்கு ஒருநாள் முன்னதாக முன்பதிவு செய்யப்படும் தட்கல் டிக்கெட்கள் பெரும்பாலானோருக்கு கிடைப்பதில்லை. எனவே இரண்டு மாதங்களுக்கு முன்பே காத்திருந்து டிக்கெட்களை முன்பதிவு செய்து விடுகின்றனர். அந்த வகையில், இந்த ஆண்டு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் திங்கட்கிழமையுடன் சேர்த்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. எனவே பெரும்பாலானவர்கள் வெள்ளிக்கிழமையே அதாவது அக்டோபர் 17ம் தேதியே ஊருக்கு கிளம்புவார்கள்.

எனவே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல விரும்புபவர்கள் நேற்று (திங்கட்கிழமை) முதல் முன்பதிவு செய்யலாம். அதன்படி, அக்டோபர் 17ம்தேதி சொந்த ஊருக்கு செல்ல விரும்புபவர்கள் நாளையும், அக்டோபர் 18ம்தேதி (சனிக்கிழமை) பயணம் செய்ய விரும்புபவர்கள் நாளை மறுதினமும் (செவ்வாய்க்கிழமை), அக்டோபர் 19ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பயணம் செய்பவர்கள் வருகிற 20ம்தேதியும் முன்பதிவு செய்யலாம். மேலும், அக்டோபர் 20ம்தேதி (திங்கட்கிழமை) தீபாவளி அன்று பயணம் செய்ய விரும்புபவர்கள் வரும் 21ம்தேதியும் முன்பதிவு செய்யலாம். முன்னதாக அக்டோபர் 16ம்தேதி (வியாழன்) அன்று சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

அப்போது, சென்னையில் இருந்து மதுரை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் போன்ற தென் மாவட்டங்களுக்கு போகிற பாண்டியன், முத்துநகர், நெல்லை, பொதிகை, கன்னியாகுமரி விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவானது, அன்றைய தினமே (ஆகஸ்ட் 17) முடிந்து காத்திருப்பு பட்டியலுக்கு மாறியது. இந்நிலையில், அக்டோபர் 17ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று (ஆகஸ்ட் 18) காலை 8 மணிக்கு தொடங்கியது. டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 10 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் மின்னல் வேகத்தில் விற்று தீர்ந்தது.

* ரயில் கட்டணத்தில் 20% தள்ளுபடி

பண்டிகைகளின் போது அதிகரித்து வரும் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு பயணிகளுக்காக இந்திய ரயில்வே சிறப்பு சுற்றுப் பயணத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. தீபாவளி உள்ளிட்ட சிறப்பு பண்டிகைகளில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், தீபாவளி பண்டிகை அன்று ரிட்டன் டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்தால் அடிப்படைக் கட்டணத்தில் 20 சதவீதம் தள்ளுபடி பெற முடியும்.

இது இரு திசைகளிலும் ரயில்களை சிறப்பாகப் பயன்படுத்த உதவும். இந்த சுற்றுப் பயணத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள, முதலில் முன்னோக்கி டிக்கெட்டை முன்பதிவு செய்வது கட்டாயமாகும். அதன் பிறகுதான் இணைப்புப் பயண அம்சத்தின் மூலம் நிலையான தேதிகளில் திரும்பும் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும். குறிப்பிட்ட தேதிகள் வரை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால் மட்டுமே இந்தத் திட்டத்தின் பலன் கிடைக்கும்.