தீபாவளி, சாத் பண்டிகை காலங்களில் நெரிசலை சமாளிக்கும் வகையில் ரயில்வே புதிய சோதனை திட்டம்!!
04:46 PM Aug 09, 2025 IST
டெல்லி : தீபாவளி, சாத் பண்டிகை காலங்களில் நெரிசலை சமாளிக்கும் வகையில் ரயில்வே புதிய சோதனை திட்டத்தை கொண்டு வர உள்ளது. ரவுண்ட் ட்ரிப் பேக்கேஜ் என்ற பெயரில் பயணிகளுக்கு திரும்பி வரும் டிக்கெட் கட்டணத்தில் 20% தள்ளுபடி கொடுக்கப்பட உள்ளது. அக்.13 மற்றும் அக்.26ம் தேதிக்கு இடையில் பயணம் செய்பவர்களுக்கு ஆக. 14ம் தேதி முன்பதிவு தொடங்குகிறது.