இன்று முதல் தீபாவளி வரை தங்கமயில் ஜூவல்லரியில் 4 நாள் செயின் திருவிழா
சென்னை: தீபாவளி மற்றும் தந்தேராஸ் விழாக்களை முன்னிட்டு இன்று முதல் தங்கமயில் ஜூவல்லரியில் செயின் திருவிழா நடைபெறுகிறது. தங்கமயிலின் சிறப்பு சலுகையாக இன்று (அக்.17) முதல் வரும் தீபாவளி வரை 4 நாட்கள் மட்டும் வாடிக்கையாளர்கள் வாங்கும் அனைத்து செயின்களும் மிகக் குறைந்த சேதாரத்தில் விற்பனை செய்யப்படுகிறது. தங்கமயில் நிறுவனத்தின் தனித்துவமான செயின்களை அணிந்து இந்த தீபாவளியை கொண்டாடுங்கள் என்றும், இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தங்கமயில் நிறுவனத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
செயின் திருவிழாவின் சிறப்பு ஆபராக, வாடிக்கையாளர்கள் வாங்கும் 6% வரை சேதாரம் உள்ள செயின்களுக்கு சேதாரம் 1.99% மட்டுமே. 6 சதவீதத்திற்கு மேல் சேதாரம் உள்ள செயின்களுக்கு சேதாரம் 5.99% மட்டுமே. மேலும் வாடிக்கையாளர்கள் வாங்கும் வைர நகைகளுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை சிறப்பு தள்ளுபடி மற்றும் சேமிப்பு திட்டத்தில் இணையும் அனைவருக்கும் நிச்சய பரிசுகள் உண்டு. தீபாவளி அன்றும் தங்கமயில் நிறுவனத்தில் சிறப்பு விற்பனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.