தீபாவளிக்கு முன்பே மக்கள் பட்டாசுகளை வெடிக்க தொடங்கியதால் சென்னையை சூழ்ந்த புகைமூட்டம்!
சென்னையின் பல்வேறு இடங்களில் தீபாவளிக்கு 2 நாட்கள் முன்பே மக்கள் பட்டாசுகளை வெடிக்க தொடங்கியதால் நகரின் சில பகுதிகளில் காற்றுமாசு ஏற்பட்டு புகைமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. எதிரில் வரும் வாகனம் தெரியாத நிலைக்கு புகைமூட்டம் சூழ்ந்துள்ளதால் வாகனங்கள் வேகக் குறைவாகவே செல்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. சுவாசப் பிரச்னைகளை தடுக்க, முகக்கவசங்கள் அணிந்து கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Advertisement
Advertisement