தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீபாவளி பண்டிகைக்காக விண்ணை முட்டும் அளவில் உயர்த்தப்பட்ட ஆம்னி பஸ்கள் கட்டணம் அதிரடியாக குறைப்பு

* சென்னை-மதுரை ரூ.2,500; சென்னை-நெல்லை ரூ.3000, கட்டணம் குறைக்காத பஸ்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க முடிவு

Advertisement

சென்னை: தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசு சார்பில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சிலர் முன்பதிவு செய்ய முடியாத நிலையில் தனியார் பேருந்துகளை நாடி செல்லும் சூழலில் வழக்கம் போல் இந்த முறையும் ஆம்னி பேருந்தின் கட்டணம் அதிரடியாக உயர்ந்தது. குறிப்பாக, 3 மடங்கு வரை கட்டணத்தை உயர்த்தி வசூல் வேட்டை நடத்தப்பட்டு வந்தன. இதுகுறித்த புகார் போக்குவரத்து துறை கவனத்திற்கு வந்த நிலையில் உடனடியாக கட்டண கொள்ளையை நிறுத்தாவிடில் ஆம்னி பேருந்துகளின் வாகனங்கள் சிறை பிடிக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதேபோல், போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு குழும ஆணையர் கஜலட்சுமி தலைமையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினருடன் ஆலோசனைக் கூட்டம் கடந்த 14ம் தேதி நடத்தப்பட்டன. அப்போது, ஆம்னி பேருந்துகள் விதிகளுக்கு உட்பட்டு இயங்க வேண்டும் என்றும், தற்போது அதிக கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் வந்துள்ளதால், கடந்த பொங்கல் பண்டிகையின்போது அதிக கட்டணம் வசூலித்த பேருந்துகள் சிறை பிடிக்கப்பட்டதைப் போல இம்முறையும் நடந்து கொள்ள வேண்டாம் என்றும் ஆணையர் கடுமையாக எச்சரித்தார்.

மேலும், அரசு நிர்ணயித்த கட்டணத்தில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும் இக்கூட்டத்தின் வாயிலாக அறிவுறுத்தப்பட்டது. அரசின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, தமிழகத்தில் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை - மதுரை பயணத்துக்கு ரூ.4,000 வரை கட்டணம் உயர்த்தப்பட்டிருந்த நிலையில், ரூ.2,600 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னை - நெல்லை ஆம்னி பேருந்து கட்டணம் ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டிருந்த நிலையில், ரூ.3,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது தவிர கடந்த 2022ம் ஆண்டு மாநில அரசுடன் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினரிடையே ஒப்புக்கொள்ளப்பட்ட வரையறையின்படி, திருச்சி, கோவை உள்ளிட்ட பிற இடங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்களும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன.

மேலும், அரசின் உத்தரவை மீறி அதிக கட்டண வசூலில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகளை கண்காணித்து அதன் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன் அதிகமாக வசூலிக்கும் டிராவல்ஸ் நிறுவனங்களை பயணிகள் புறக்கணிக்க வேண்டும். மேலும், கட்டண தொடர்பான புகார்களை 90433 79664 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்றார்.

Advertisement