தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டம்; ரூ.37,000 கோடிக்கு ஜவுளி, பட்டாசு விற்பனை: வியாபாரிகள், பொதுமக்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி

சென்னை: தமிழகத்தில் தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பட்டாசு வியாபாரம் எதிர்பார்த்ததைவிட அதிகளவில் இருந்ததால் வியாபாரிகள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தனர். பகல் நேரங்களில் மழை இல்லாததால் பொதுமக்களும் மகிழ்ச்சியுடன் பட்டாசு வெடித்தனர். இந்த தீபாவளிக்கு மாநிலம் முழுவதும் சுமார் ரூ.30 ஆயிரம் கோடிக்கு மேல் ஜவுளி விற்பனையும், ரூ.7 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை ஆனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழகத்திலும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காலையில் எழுந்து, குளித்து புத்தாடை அணிந்து கோயிலுக்கு சென்று வழிபட்டனர். பின்னர் உறவினர்கள், நண்பர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். இதைத்தொடர்ந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஞாயிறு, திங்கள் (தீபாவளி) அன்று இரவு நேரங்களில் மட்டுமே மழை பெய்தது. காலை முதல் இரவு வரை மழை இல்லாமல், வானம் தெளிவாக இருந்தது. இதனால் தீபாவளி மற்றும் முந்தைய நாள் ஞாயிறு ஆகிய நாட்களில் காலை முதல் இரவு வரை போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொருவரும் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். குறிப்பாக, இந்த தீபாவளி பண்டிகைக்கு பகலில் வெடிக்கும் வெடியை விட இரவு நேரத்தில் வெடிக்கும் ராக்கெட், புஸ்வானம் மற்றும் வானில் வர்ணஜாலம் காட்டும் வெடிகள் அதிகளவில் வெடிக்கப்பட்டது. சென்னையில் இதுபோன்ற பட்டாசுகள் வெடிக்கும்போது, இரவை பகலாக்கும் அளவுக்கு வானத்தில் பட்டாசு வர்ணஜாலம் காட்டியது என்று சொன்னால் அது மிகையாகாது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தீபாவளி பண்டிகையையொட்டி, ஆங்காங்கே பட்டாசு விற்பனைக்காக தனி கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, சிவகாசியில் இருந்து நேரடியாக சென்னைக்கு வந்து பலரும் தள்ளுபடி விற்பனையில் பட்டாசுகளை விற்பனை செய்து அசத்தினர். இந்த கடைகளில் கடந்த சில நாட்களாகவே கூட்டம் அலைமோதியது. குறிப்பாக ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் காலை முதல் இரவு வரை வானம் தெளிவாக இருந்ததால் பொதுமக்களும் ஆர்வமுடன் பட்டாசுகளை போட்டி போட்டு வாங்கி வெடித்து மகிழ்ந்தனர். சென்னையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி வரைகூட கடைகளில் பட்டாசுகளை வாங்க அதிகளவில் மக்கள் திரண்டு இருந்ததை பார்க்க முடிந்தது. அதனால், இந்த தீபாவளிக்கு பட்டாசு வியாபாரிகள் அதிகளவில் விற்பனை செய்து, அதிக லாபம் பார்த்தனர். இரவு 11 மணி வரை சென்னை உள்ளிட்ட நகர் பகுதிகளில் பட்டாசு மற்றும் மத்தாப்பு வெடி சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.

இதுகுறித்து சிவகாசி பட்டாசு வியாபாரிகள் சிலர் கூறும்போது,

”நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு விற்பனையில் மந்தநிலை ஏற்பட்டிருந்தது. இதனால் சிவகாசி பட்டாசு தொழிலாளிகள் பெரியஅளவில் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும், தமிழகத்தில் மழை இல்லாததால் 10 நாட்களுக்கு முன்னதாகவே சென்னையில் தீவுத்திடல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பட்டாசுகள் விற்கப்பட்டது.

சென்னையில் இரவு நேரங்களில் மட்டுமே மழைபொழிவு இருந்தது. இதனால் பொதுமக்கள் காலை நேரங்களில் பட்டாசுகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். சென்னை மட்டுமல்லாமல், தமிழகத்தின் முக்கிய நகர் பகுதியான மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, சேலம், புதுக்கோட்டை, ஈரோடு, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நேரடியாக சிவகாசியில் இருந்து பட்டாசு விற்பனை செய்ய ஏற்பாடு செய்திருந்தோம். இதுதவிர தமிழகம் மட்டும் இல்லாமல் வெளிமாநிலங்களுக்கும் சிவகாசியில் இருந்து பட்டாசுகள் அனுப்பி வைக்கப்பட்டது.

சென்னை உள்ளிட்ட முக்கிய நகர் பகுதிகளில் மழை இல்லாமல் வானம் தெளிவாக இருந்ததால் பட்டாசு பிரியர்கள் மிகவும் ஆர்வமுடன் பட்டாசு வெடிக்க முடிந்தது. நேற்று முன்தினம் இரவு வரை கூட பட்டாசு கடைக்கு வந்து பட்டாசுகளை வாங்கிசென்றனர். இதனால் 2 ஆண்டுகளுக்கு பிறகு பட்டாசு வியாபாரிகள் அதிக லாபம் பெற்று இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ.7 ஆயிரம் கோடி வரை பட்டாசு விற்பனையாகி இருக்கலாம்” என்றனர். பட்டாசு விற்பனையை போன்று ஜவுளிக்கடைகளிலும் விற்பனை அமோகமாக இருந்தது. இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் ஜவுளிக்கடைகளில் கடந்த சில நாட்களாக கூட்டம் அலைமோதியது.

தீபாவளியொட்டி அனைத்து ஜவுளி கடைகளிலும் புதிய மாடல் ஆடைகளும் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது. சென்னையில் பெரிய பெரிய ஜவுளி கடைகளில் தீபாவளிக்கு முன் ஒரு வாரமாக மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, கடைசி நேர ஷாப்பிங் கலை கட்டியது. கடந்த சில ஆண்டுகளைவிட இந்த ஆண்டு புதிய ஆடைகளின் விலை அதிகளவில் இருந்தாலும், பொதுமக்கள் அதை பொருட்படுத்தாமல் வாங்கி சென்றனர். பொதுமக்கள் புதிய ஆடைகள் வாங்க அதிக ஆர்வம் காட்டியதாலும் தமிழகம் முழுவதும் சுமார் ரூ.25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஜவுளி விற்பனை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜவுளி விற்பனையாளர்கள் கூறும்ேபாது, ‘‘கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி ஜவுளி விற்பனை அமோகமாக இருந்தது. குடும்பம், குடும்பமாக ஜவுளி கடைகளுக்கு வந்து புதிய ஆடைகளை வாங்கி சென்றனர். குறிப்பாக, கடைசி நேர விற்பனை சூடுபிடித்தது.

இதனால் ஜவுளி வியாபாரிகள் மகிழ்ச்சியாக உள்ளனர்” என்றனர். அதேபோல நகைக்கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. விலை ஏற்றத்தையும் பொருட்படுத்தாமல் குறைந்த அளவுக்காவது நகை வாங்க வேண்டும் என்று கூறி நகைகளை பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.

ஆடு, கோழி, மீன் விற்பனை அமோகம்

தீபாவளி பண்டிகையையொட்டி ஜவுளி, பட்டாசு விற்பனையை போன்று ஆடு மற்றும் கோழி விற்பனையும் அமோக இருந்தது. முன்னதாக கடந்தவாரம் சந்தைகளில் பல்லாயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. ஆடுகளை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை கொடுத்து வியாபாரிகள் வாங்கி சென்றனர். இதன்மூலம் தமிழக ஆடு சந்தைகளில் ரூ.5 ஆயிரம் கோடிக்கும் மேல் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதே அளவுக்கு கோழிகளும் விற்பனையானது. தீபாவளியையொட்டி கறிக்கடைகளில் ஒரு இறைச்சி ரூ.1,000 முதல் ரூ.1,100 வரை விற்பனை செய்யப்பட்டது. தீபாவளிக்கு முன் ஒரு கிலோ இறைச்சி ரூ.900 முதல் ரூ.940 வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று கோழி இறைச்சியும் ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டது. விலை அதிகம் இருந்தாலும் பொதுமக்கள் கறிக்கடைகளில் வரிசையில் நின்று ஆடு, இறைச்சி கறியை வாங்கி சென்றனர். மீன் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.

Advertisement