தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீபாவளியை முன்னிட்டு விமானங்களில் டிக்கெட் கட்டணம் 5 மடங்கு அதிகரிப்பு..!!

சென்னை: தீபாவளியை முன்னிட்டு விமானங்களில் டிக்கெட் கட்டணம் 5 மடங்கு அதிகரித்துள்ளது.

Advertisement

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் டிக்கெட் கட்டணங்கள் 4 மடங்கு அதிகரித்தது. மதுரை, திருச்சி, கோவை, கவுகாத்தி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் டிக்கெட் கட்டணம் 5 மடங்கு உயர்ந்துள்ளது. தூத்துக்குடி, டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத் செல்லும் விமானங்களிலும் டிக்கெட் கட்டணம் ராக்கெட் வேகத்தில் அதிகரித்துள்ளது.

சென்னையில் இருந்து மதுரைக்கு வழக்கமாக விமான கட்டணம் ரூ.3,129 வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.17,683 வரை வசூல் செய்யப்படுகிறது. சென்னையில் இருந்து திருச்சிக்கு சாதாரண நாள் கட்டணம் ரூ.3,608; தற்போது ரூ.15,233 வரை வசூல் செய்யப்படுகிறது. சென்னை - கோவை சாதாரண நாள் விமான கட்டணம் ரூ.4,351 வரை இருந்த நிலையில் இன்றைய கட்டணம் ரூ.17,158 ஆக உயர்ந்துள்ளது. சென்னை- தூத்துக்குடி இடையே சாதாரண நாள் கட்டணம் ரூ.3,608; இன்று ரூ.17,053 வரை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

சென்னை- டெல்லி, சாதாரண நாள் கட்டணம் ரூ.5,933; இன்றைய கட்டணம் ரூ.30,414 வரை வசூல். சென்னை - மும்பை இடையே சாதாரண நாட்களில் விமான கட்டணம் ரூ.3,356 வசூலிக்கப்படும் நிலையில் இன்று ரூ.21,960 வரை வசூல். சென்னை - கொல்கத்தா சாதாரண நாள் கட்டணம் ரூ.5,293; இன்றைய கட்டணம் ரூ.22,169 வரை வசூலிக்கப்படுகிறது. சென்னை - ஐதராபாத், சாதாரண நாள் கட்டணம் ரூ.2,926; இன்றைய கட்டணம் ரூ.15,309 வரை வசூல்.

சென்னை- கவுகாத்தி, சாதாரண நாள் கட்டணம் ரூ.6,499; இன்றைய கட்டணம் ரூ.21,639 ஆக உயர்ந்துள்ளது. சென்னை-பாட்னா, சாதாரண நாள் கட்டணம் ரூ.4,972; இன்றைய நாள் கட்டணம் ரூ.15,584. சென்னை - சேலம் இடையே இன்று, நாளை பயணத்துக்கான விமான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தன. விமான கட்டணங்கள் நாளை மேலும் அதிகமாக உயர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

Advertisement