வரலாற்று சாதனை படைத்த திவ்யான்ஷி!
மும்பை கண்டிவாலியில் பிறந்த திவ்யான்ஷி பத்தாம் வகுப்பு படிக்கிறார். கொரோனா தடை காலத்தில் அவரது தந்தை வீட்டிற்குள்ளேயே டேபிள் டென்னிஸ் அட்டையை வைத்து பயிற்சிக் கொடுத்திருக்கிறார். துவக்கத்தில் சற்று ஆர்வமில்லாமல் இருந்தாலும், நாள்தோறும் 4‑5 மணி நேர பயிற்சியால் அவருடைய திறமையை வளர்த்துக் கொண்டார். அவரது தந்தை ரகுல் பௌமிக் மற்றும் அவரது சகோதரி உட்பட மூவருக்கும் தினமும் இதுதான் வேலை. ருமேனியாவில் நடக்கவிருக்கும் உலக சாம்பியன் போட்டியில் பங்கேற்று கோப்பை வாங்குவதே திவ்யான்ஷியின் கனவு. தொடர்ந்து ஒலிம்பிக்கிலும் பதக்கம் பெற வேண்டும் என பட்டியலிடுகிறார் இந்த இளம் சாதனை மங்கை திவ்யான்ஷி.