விவகாரத்து பெற்ற மனைவி வேலைக்கு போனாலும் அவருக்கு பராமரிப்பு தொகையை கணவர் கட்டாயம் தர வேண்டும்: கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கொல்கத்தா: விவகாரத்து பெற்ற மனைவி வேலைக்கு போனாலும் அவருக்கு பராமரிப்பு தொகையை கணவர் கட்டாயம் தர வேண்டும் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கணவர் வேலைக்கு செல்லாததால் மனைவிக்கு பராமரிப்புத் தொகை தர தேவையில்லை என்று குடும்பநல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த வழக்கில் குடும்ப நல நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மனைவி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிங்சர் மனைவி பணிக்கு செல்லும் நிலையில் கணவனுக்கு வேலை இல்லை என தெரிவித்திருந்தார். இதை அடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் கணவருக்கு தார்மீக பொறுப்பு இருக்கிறது. மாதம் ரூ.4,000 வழங்க வேண்டும் எனவும் நிலுவைத் தொகையை 12 மாத தவணையாக 2026 அக்டோபருக்குள் செலுத்த வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டு. உத்தரவு வழங்கிய குடும்ப நல நீதிமன்றத்துக்கும் கொல்கத்தா உயர்நீதிமன்றம் கடும் ஆட்சேபத்தை தெரிவித்தது.