பலதரப்பட்ட நம்பிக்கைகளும், கலாச்சாரமும்தான் நாட்டின் அழகு முஸ்லிம் போலீசார் தாடி வளர்க்கலாம்: ஐகோர்ட் கிளை கருத்து
பின்னர் மதுரை மாவட்ட காவல் ஆணையரிடம் அவர் முறையிட்ட நிலையில், அது இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. பல்வேறு மதங்களையும், கலாச்சாரங்களையும் கொண்டது இந்தியா. பலதரப்பட்ட குடிமக்களின் நம்பிக்கைகளும், கலாச்சாரமும் ஒருங்கிணைந்ததுதான் இந்நாட்டின் அழகும், தனித்துவமும். மனுதாரர் தரப்பில், காவல்துறையில் இருந்தாலும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பணியில் இருக்கும் போது நேர்த்தியாக தாடி வைத்துக்கொள்ள அனுமதி வழங்குவதை சுட்டிக்காட்டியுள்ளார். காவல்துறை சட்ட விதிகளிலும் இதற்கு அனுமதி உண்டு. எனவே தாடி வைத்துக்கொள்ள தடை விதிக்க முடியாது. இறைத்தூதரான நபிகள் நாயகத்தை பின்பற்றும் இஸ்லாமியர்கள், வாழ்க்கை முழுவதும் தாடி வைத்திருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் சிறப்பு. மனுதாரர் மீண்டும் பணியில் சேர்ந்து உடல்நலக்குறைவுடன், அது தொடர்பான மருத்துவ சான்றிதழுடன் விடுப்பு கோரி உள்ளார். அவருக்கு விடுப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதை விடுத்து, தண்டனையை மாற்றியமைத்த மதுரை காவல் ஆணையரின் உத்தரவு அதிர்ச்சியூட்டும் வகையில், ஏற்றத்தாழ்வுடன் உள்ளது. ஆகவே, மனுதாரருக்கான ஊதிய உயர்வை நிறுத்தி வைத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, 8 வாரங்களுக்குள் மதுரை மாநகர காவல் ஆணையர் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.