இடையூறு செய்த சுற்றுலாப்பயணி; ஆவேசமடைந்து தாக்கிய காட்டுயானை
09:08 AM Aug 11, 2025 IST
கர்நாடகா பந்திப்பூர் வனவிலங்குகள் காப்பகம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற சுற்றுலா பயணி ஒருவர், காட்டு யானையை படம் பிடித்து இடையூறு செய்தார். அப்போது ஆவேசம் அடைந்த காட்டு யானை அவரை தாக்கியது. இதில் காயம் அடைந்த அவரை, அருகே இருந்தவர்கள் காப்பாற்றினர்.