சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் காவலருக்கு எதிரான மனு தள்ளுபடி
மதுரை: சொந்த மாவட்டத்தில் காவலர்கள் பணியாற்றுவதை எதிர்த்து, கன்னியாகுமரியைச் சேர்ந்த அசோக்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரியா கிளெட் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவு: கீழ்நிலை காவலர்கள் தங்கள் மாவட்டத்திற்குள் மாற்றப்படுகிறார்கள்.
சில நேரங்களில் நிர்வாக காரணங்களுக்காக, பிற மாவட்டங்களுக்கு மாற்றப்படுகிறார்கள். இடமாற்றம் மற்றும் பணியமர்த்தல் ஆகியவை காவல் துறையின் நிர்வாகரீதியானவை. நீதித்துறை மறுஆய்வு அதிகாரத்தைப் பயன்படுத்தி நிர்வாகத்தை நடத்தவோ அல்லது பணியாளர்களை இடமாற்றம் செய்வது தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கவோ முடியாது. எனவே, இந்த மனு நிலைக்கத்தக்கதல்ல என்பதால் தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.